2022-சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளரின் ஆலோசனையின் கீழ் எமது காரியாலயத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினால் 2022 மார்ச் 8ம் திகதி விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் கலகெதர பிரதேச வைத்தியசாலையின் பூரன ஒத்துழைப்புடன் விஷேட மருத்துவ பரிசோதனை நிகழ்வொன்று எமது காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் நவீன காலத்தின் குடும்பப் பராமரிப்பில் மகளிரின் பங்களிப்பு எனும் தலைப்பில் பொது மக்களுக்கான ஒரு விளிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி நிகழ்வானது சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் அதுல ஶ்ரீ மஹாநாம மற்றும் கலகெதர பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் திருமதி மெனிகே நவரத்ன ஆகியோரால் நடாத்தப்பட்டது.









இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி எமது காரியாலயத்திலும் சுதந்திர தின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே பேருசிங்ஹ தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அவர் மூலம் தேசிய கொடியேற்றப்பட்டு சுதந்திர நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு உரை நிகழ்த்தப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் விதமாக 2 நிமிட மௌன அஞ்ஞலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது சிறுவர் பாதுகாப்பு உத்தியொகத்தர் திரு. அதுல ஶ்ரீ மஹாநாம அவர்களால் சுதந்திர நிகழ்வும் எமது பொறுப்பும் என்ற தலைப்பில் ஓர் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத்தொடரந்து மர நடுகை நிகழ்வொன்றும் சிரமதான நிகழ்ச்சியும் காரியாலய வலாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








2021ம் ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டமானது கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி ஜீ.எல் பீரிஸ், ஊடக அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் ப.உ வசந்த யாப்பா பண்டார ஆகியோரின் தலமையில் கடந்த ஜனவரி 2ம் திகதி நடைபெற்றது









2022 ம் புதிய ஆண்டின் முதலாவது காரியாலய தினமானது பிரதேச செயலாளர் தலமையில் தேசிய கொடியேற்றி ஆரம்பிக்கப்பட்டதோடு அன்றைய தினம் சகல உத்தியோகத்தர்களாலும் அரச ஊழியர்களின் பிரகடனமும் வாசிக்கப்பட்டதது. அதுமட்டுமன்றி அன்றைய தினம் பல மத வலிபாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
.






2021 ம் புதிய ஆண்டின் முதலாவது காரியாலய தினமானது பிரதேச செயலாளர் தலமையில் தேசிய கொடியேற்றி ஆரம்பிக்கப்பட்டதோடு அன்றைய தினம் சகல உத்தியோகத்தர்களாலும் அரச ஊழியர்களின் பிரகடனமும் வாசிக்கப்பட்டதது. அதுமட்டுமன்றி அன்றைய தினம் பல மத வலிபாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததேன.























