தகவல்களைப் பெறுவதற்கான நடைமுறைகள்
மேற்படி சட்டத்தின் கீழ் தும்பனே பிதேச செயலகத்திற்குரிய தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அலுவலருக்கு RTI 01 எனும் விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். இவ் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை.
தகவல் அலுவலர்

பெயர்: திருமதி டப்ளியூ.எம்.ஈ.கே. பண்டாரநாயக
பதவி: உதவி பிரதேச செயலாளர்
முகவரி: தும்பனே பிரதேச செயலகம் – கலகெதர
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: ++94 81 246 0403 ,+94 81 246 1234
தொலைநகல்: +94 81 206 1434
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவலறிவதற்காக விண்ணப்பித்தல்
- தகவலறிவதற்காக எழுத்துமூலம் RTI 01 எனும் விண்ணப்பப் படிவத்தினை அல்லது வாய்மொழி மூலமான வேண்டுகோள் ஒன்றை தகவல் அலுவலரிடம் விடுத்து, அது கிடைத்தமைக்கான கடிதம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும்.
- தங்களது கோரிக்கைக்கு உரிய தகவல்களை வழங்க முடியுமா என்பது பற்றி கூடிய விரைவில், எவ்வாறாயினும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும்.
- வேண்டப்படும் தகவல்களை தங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் பட்சத்தில், ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருப்பின் அது பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படும். தகவல்களைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் அதற்கமைவான கட்டணத்தைச் செலுத்தி அல்லது கட்டணம் செலுத்த வேண்டியிராவிடின் கட்டணமின்றி தங்களுக்கு 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படும்.
- கட்டணம் செலுத்திய பின்னர் 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குவதில் அசௌகரியம் ஏதும் ஏற்படும் பட்சத்தில், அக்கால எல்லையை நீடிப்பதற்கு அவசியமான காரணங்களை குறிப்பிட்டு 21 நாட்களை விட அதிகரிக்கா மேலதிக காலஎல்லையினுள் தாங்கள் கோரிய தகவல்கள் தங்களுக்கு வழங்கப்படும்.
- தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோள் ஏதேனும் பிரசையின் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் சம்பந்தமாக எனில், அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பாக 48 மணிநேரத்தினுள் பதிலளிக்கப்படும்.
- தகவல்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பான வேண்டுகோளுக்கு ஏற்ப,
- தகவலுக்காக வழங்கப்பட்ட கோரிக்கை ஒன்றை தகவல் அலுவலர் மறுத்தல்
- பிரிவு 5 இன் கீழ் அத்கைய தகவல்களை வழங்குதல் விலக்களிக்கப்பட்டுள்ளது என தகலைப் பெற அணுகுவதற்கு தகவல் அலுவலர் மறுத்தல்
- சட்டத்தில் குறித்தரைக்கப்பட்ட காலவரையறைக்கு இணங்கி ஒழுகாமை
- தகவல் அலுவலர் பூரணமற்ற, தவறாக இட்டுச்செல்லக்கூடிய அல்லதுபொய்யான தகவல்களை வழங்குதல்
- தகவல் அலுவலர் மேன் மிகையான கட்டணங்ளை அறவிடுதல்
- கோரப்பட்டுள்ள வடிவத்தில் தகவல்களை வழங்க மறுத்தல்
- தகவல்ளை பெறுவதை தடுக்கும் வகையில் தகவல் உருக்குலைக்கப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது, அல்லது தவறாக இடப்பட்டுள்ளது எனகோரிக்கையை விடுக்கும் பிரஜை நியாயமான ஏதுக்களை கொண்டிருத்தல்
இது தொடர்பாக அதிருப்தியடையும் பட்சத்தில், கீழே பெயர் குறிப்பிடப்பட்ட அலுவலருக்கு 14 நாட்களுக்குள் மேன்முறையீடொன்றை சமர்ப்பிக்க முடியும்.
பெயர் குறிக்கப்பட்ட அலுவலர்

பெயர்: திரு.சமீர நுவன் ரத்நாயக்க
பதவி: பிரதேச செயலாளர்
முகவரி: தும்பனே பிரதேச செயலகம் – கலகெதர
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: +94 81 246 1402 / +94 81 246 1234
தொலைநகல்: +94 81 206 1434
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வெவ்வேறு பிரிவுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தகவல் அதிகாரிகள்
|
பெயர்
|
|
பிரிவு
|
தொலைபேசி இல.
|
|
திருமதி ஜீ.டப்.ஜீ.டீ.பீ கலபிடவத்த கணக்காளர்
|
 |
நிதிப் பிரிவு
|
+94 81 2461 403
|
|
திருமதி பீ.ஜீ.டீ.டீ பின்னவல உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)
|
 |
அபிவிருத்திப் பிரிவு
|
+94 81 2461 190
|
விடய அதிகாரி
| பெயர் |
|
பிரிவு |
தொலைபேசி இல. |
| துசித குமார |
 |
தாபனப்பிரிவு |
+94 75 211 1111 |
ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்தல்
- தகவல் வழங்க நியமிக்கப்பட்ட அலுவலரின் இறுதி முடிவு திருப்தியற்றதாயின் அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பிட்டுள்ள குறிப்பிட்ட கால எல்லைக்குள் அந்த அதிகாரியிடமிருந்து ஒரு முடிவு கிடைக்க தவறின் விண்ணப்பதாரிக்கு மேன்முறையீடு செய்ய முடியும். அதற்காக, மாதிரி படிவத்தின் மூலம் தேவையான தகவலை வழங்குவதனூடாக ஆணைக்குழுவிடம் முறையீடு செய்யலாம்.
- மேன்முறையீட்டை நேரடியாக ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படவோ அல்லது பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட முடியும்.
- மேன்முறையீடுகள் குறித்த பிரச்சினை தோற்றம் பெற்று இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
- அத்தகைய மேன்முறயீடுகளுடன் பின்வரும் உண்மைபிரதிகள் விண்ணப்பதாரியால் இணைக்கப்படல் வேண்டும்
- தகவல் அறிதல் சட்டத்தின் பிரிவு 24 ன் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களுக்கான கோரிக்கையின் பிரதி
- தகவல் அலுவலரிடமிருந்து ஏதெனும் பதில்கள் கிடைக்கப்பெற்றிருப்பின் அவற்றின் நகல்கள்
- தகவல் அறிதல் சட்டத்தின் 31 ஆம் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட அலுவலருக்கு வழங்கப்பட்ட மேல்முறையீட்டு நகல்
- நியமிக்கப்பட்ட அலுவலரால் ஏதேனும் கட்டளைகள் பிரப்பிக்கப்பட்டிருப்பின் அதன் பிரதிகள்
- மேன்முறையீட்டுடன் தொடர்பான ஆவணங்களின் நகல்கள்
- மேன் முறையீடு முறையீட்டாளரால் பிரதிகளில் விண்ணப்பிக்கப்படல் வேண்டும்
- உப விதிகள் (1-5)ல் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஆணையகம் குறித்த மேன்முறையீட்டை ஏற்றுக்கொள்ளாது
- தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் மேன்முறையீட்டு மனு தாக்கல் இரண்டு மாதங்களை விட தாமதித்து தாக்கல் செய்யப்படின் குறித்த குறித்த காரணம் நியாயமாயின் ஆணைக்குழு மறையீட்டை ஏற்றுக்ெகாள்ளும்.
ஆணையகத்தின் விலாசம்
மஹிந்த கம்மன்பில
தலைவர்
தகவல் அறிதல் உரிமை ஆணையகம்
அறை இலக்கம். 203-204
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்
கொழும்பு 07
தொலைபேசி இல. +94 11 2691625
கட்டணங்கள்:
1. விண்ணப்ப கட்டணம்
- எந்தவொரு பகிரங்க அதிகார சபையும், யாரேனும் ஒரு நபரினால் தகவலறியும் உரித்து தொடர்பான விண்ணப்பம் ஒன்றைக் கோரும் பட்சத்தில் எந்தவித கட்டணமும் அறவிடப்படலாகாது.
- தகவலறிதல் சம்பந்தமான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அதன் உண்மைப் பெறுமதி அறவிடப்படும்
(i) Photocopy நிழற்படப் பிரதி
(a) ரூபா. 2/- (ஒரு பக்கம்) ரூபா 4/- (இரண்டு பக்கங்கள்) A4 தாள் (21 cm x 29.7 cm)அல்லது அதைவிட சிறிய
(b) ரூபா. 4/- (ஒரு பக்கம்) ரூபா 8/- (இரண்டு பக்கங்கள்) Legal அளவு (21.59 cm x 35.56 cm) மற்றும் A3 (29.7 cm x 42 cm)
(c) மேலே குறிப்பிட்டுள்ளதை விட பெரிய அளவு காகிதங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு அதன் உண்மைப் பெறுமதி அறவிடப்படும்
(ii) Printout அச்சுப் பிரதி
(a) ரூபா. 4/- (ஒரு பக்கம்) ரூபா 8/- (இரண்டு பக்கங்கள்) A4 தாள் (21 cm x 29.7 cm)அல்லது அதைவிட சிறிய
(b) ரூபா. 5/- (ஒரு பக்கம்) ரூபா 10/- (இரண்டு பக்கங்கள்) Legal அளவு (21.59 cm x 35.56 cm) மற்றும் A3 (29.7 cm x 42 cm)
(c) மேலே குறிப்பிட்டுள்ளதை விட பெரிய அளவு காகிதங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு அதன் உண்மைப் பெறுமதி அறவிடப்படும்.
(iii)Diskette, Compact Disc, USB mass drive,
அல்லது ஏனைய இலத்திரணியல் கருவிகளுக்கு தகவல்களை பிரதி செய்து வழங்கும் போது ரூபா 20/= அறவிடப்படும்
(iv) அரச அலுவலகத்தால் வழங்கப்பட்ட Diskette, Compact Disc, USB mass drive, அல்லது ஏனைய இலத்திரணியல் கருவிகளுக்கு தகவல்களை பிரதி செய்து வழங்கும் போது அதன் உண்மைப் பெறுமதி அறவிடப்படும்
(v) எந்த ஒரு ஆவணம், பொருள் ஆய்வு அல்லது கட்டுமான தளத்தை ஆய்வு செய்தல் போன்றவற்றிற்கு மணிக்கு ரூபா 50/= அறவிடப்படும். குறித்த ஆய்வுக்கான நேரம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக எடுக்கும் பட்சத்தில் முதல் மணித்தியாலத்திற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது. இதுபோன்ற ஆய்வுக்கு முன்னர் இலவசமாக வழங்கப்பட்ட பொது அதிகாரிகளின் நடைமுறை அவ்வாரே இருக்கும்.
(vi) மாதிரிகளுக்கு உண்மையான விலை விதிக்கப்படும்
(vii) மின்னஞ்சல் மூலம் வழங்கப்படும் தகவல் இலவசமாக வழங்கப்படும்
2. சுற்றறிக்கைகள்,அல்லது ஒழங்குவிதிகள் மூலம் அதிகாரசபையினால் விதித்துரைக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட முன்னைய கட்டண அட்டவணை இருக்குமிடத்து, விதி 4ல் எவ்வாறான கட்டணங்கள் விதித்துரைக்கப்பட்டிருப்பினும் குறித்த கட்டண அட்டவணை தொடரந்தும் தொழிற்பாட்டிலிருக்கும்.
3.கட்டணமின்றி வழங்கும் தகவல்கள்
(1) மேலே உள்ள விதி 4ல் உள்ள விடயங்களால் தடைப்படாது, 4 பக்கங்கள் (A4 தாள்) நிழற்படப் பிரதி, அச்சுப் பிரதிகள் தயாரிக்கப்பட்ட அல்லது உள்ளடக்கப்பட்ட தகவல்களை அதிகாரசபை கட்டணமின்றி வழங்க வேண்டும்.
(2) பொதுவாக கட்டணமின்றி வழங்கப்படக்கூடிய தகவல்கள் கட்டணமின்றி வழங்கப்படுதல் வேண்டும்
4. கட்டணங்களை வெலுத்தும் விதம்
1. தகவல் அலுவலரிடத்தில் பணமாக செலுத்துதல்
2. அதிகாரசபையின் கணக்கீட்டு அலுவலருக்கு முகவரியிட்ட வங்கி வைப்புகள்.
3. அதிகாரசபையின் கணக்கீட்டு அலுவலருக்கு செலுத்தக்கூடியதான காசுக்கட்டளை
தகவல் அலுவலர் சகல கொடுப்பனவுகளுக்கும் ஒரு பற்றுச்சீட்டை வழங்குவார்.
RTI - 01
RTI -10